அதிமுக தலைவர்கள் சொத்துகளை பாதுகாக்கவே கவர்னரை சந்திக்கின்றனர்: முத்தரசன் குற்றச்சாட்டு
2021-10-21@ 01:26:26

சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று சேலத்தில் அளித்த பேட்டி: அதிமுக ஆட்சியின்போதே அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது சோதனை நடந்து வருகிறது. தங்களை தற்காத்து கொள்வதற்காகவும் தங்களின் சொத்துகளை பாதுகாக்கவும் அதிமுக தலைவர்கள் இப்போது கவர்னரை சந்திக்கின்றனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கவர்னரை சந்தித்து இருந்தால் பாராட்டி இருக்கலாம். அது மட்டுமல்ல, பொது பிரச்சனைக்காக கவர்னரை சந்திக்காத முன்னாள் முதல்வர் தங்களை பாதுகாத்திடவே கவர்னரை சந்திக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்துகிறது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.
Tags:
AIADMK leaders the governor to protect the property accused Mutharajan அதிமுக தலைவர்கள் சொத்து பாதுகாக்கவே கவர்னர் முத்தரசன் குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி குஜராத் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி
சொல்லிட்டாங்க...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு?
பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி
பூனைக்குட்டி வெளியே வந்தது; ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத்தயார்?: டிடிவி தினகரன் அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!