பொதுச்செயலாளர் என கல்வெட்டு சசிகலாவுக்கு எதிராக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் போலீசில் புகார்
2021-10-21@ 01:21:07

சென்னை: அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பாபு முருகவேல் ஆகியோர் நேற்று இரவு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்றும் வகையில், இரட்டை இலை சின்னத்தை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் மனு அளித்தார். ஆனால் டெல்லி உயர் நீதிமன்றமும், இந்தியத் தேர்தல் ஆணையமும் இரட்டை இலை சின்னத்தை பெற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்குத்தான் உரிமை உள்ளது என தீர்ப்பளித்தது.
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறார். கட்சியின் பொதுச் செயலாளர் தான்தான் எனவும் கூறி வருகிறார். எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் முன்பு நீதிமன்றத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் எதிராக அவர் பெயரில் கல்வெட்டை திறந்து வைத்துள்ளார். இது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் குற்றமாகும். எனவே சசிகலா அதிமுக கொடியை திறந்து வைப்பது, தான் பொதுச் செயலாளர் என கல்வெட்டு திறப்பது குற்றமாகும். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளனர்.
Tags:
General Secretary Inscription Sasikala Former Minister Jayakumar complained to the police பொதுச்செயலாளர் கல்வெட்டு சசிகலா மாஜி அமைச்சர் ஜெயக்குமார் போலீசில் புகார்மேலும் செய்திகள்
ஆட்சி மன்ற குழு வேட்பாளரை முடிவு செய்யும்: இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்.! செங்கோட்டையன் பேட்டி
இணையதள பக்கம் ‘ஹேக்’ காவல் ஆணையரிடம் மக்கள் நீதி மய்யம் புகார்
தமிழ்நாட்டில் மதுவிலக்கு தேவை அன்புமணி வலியுறுத்தல்
மோடிக்கு எதிரான ஆவண படம் திரையிட்ட மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்
மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நிற்கக்கோரி நாளை ரயில் மறியல்: வைகோ அறிவிப்பு
வேட்பாளரும் இல்ல, சின்னமும் இல்ல என்னத்த சொல்லி ஓட்டு கேக்க? எடப்பாடி அணி புலம்பல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!