SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ்: ‘இது போல ஒரு போட்டியில் நான் ஆடியதே இல்லை’: ஆண்டி முர்ரே பேட்டி

2021-10-20@ 15:23:45

ஆன்ட்வெர்ப்:  பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் நகரில் ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகின்றன. இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்த முதல் சுற்றுப்போட்டி ஒன்றில், முன்னாள் நம்பர் 1 வீரர் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவுடன், அமெரிக்காவின் இளம் வீரர் பிரான்சிஸ் டியாஃபோ மோதினார். 34 வயதாகும் ஆண்டி முர்ரே, காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், 2 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க துவங்கினார். வரும் ஜனவரியில் 24வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள டியாஃபோ, அமெரிக்காவின் வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரங்களில் முதன்மையானவர் எனலாம்.

இருவருக்கும் இடையேயான இப்போட்டி, மொத்தம் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் நடந்தது. 3 செட்களுமே டைபிரேக்கர் வரை சென்றே முடிந்தன. இதில் முதல் செட்டை 7-6 என ஆண்டி முர்ரே கைப்பற்றினார். 2ம் செட்டை 7-6 என டியாஃபோ கைப்பற்ற, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. 3வது செட்டில் இருவருமே அனல் பறக்க மோதினார்கள். அதிலும் முர்ரேவின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. இளம்புயல் டியாஃபோவின் அதிரடி ஷாட்டுகளை, அற்புதமாக சமாளித்து, துல்லியமாக பிளேஸ் செய்தார். இறுதியில் அந்த செட் 7-6 என முர்ரே வசமாக, போட்டி முடிவுக்கு வந்தது.

போட்டிக்கு பின்னர் இருவருமே பரவசத்தின் உச்சியில் இருந்தனர். முர்ரே வார்த்தைகள் வராமல் தடுமாறினார். அவர் கூறுகையில், ‘‘19 வயதில் இருந்தே சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறேன். 3 செட்களில் இதுபோல ஒரு நீண்ட போட்டியில் நான் இதுவரை ஆடியதே இல்லை. என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையை சொல்லப் போனால் எனது உடல் ஒத்துழைக்கவில்லை. இப்போது நான் மிகவும் களைத்திருக்கிறேன். வயதாகி விட்டது என்பதை எனக்கு நன்கு உணர்த்தி விட்டது இப்போட்டி. ஆனாலும் அடுத்தடுத்து போட்டிகளில் ஆடுவது, அதுவும் பார்வையாளர்கள் முன்னால் ஆடுவது, மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நாளை (இன்று) முழுவதும் ஓய்வெடுக்கப் போகிறேன். அப்புறம் புத்துணர்வுடன் அடுத்த மோதலுக்கு தயாராகி வருகிறேன்’’ என்றார். இந்த வெற்றியின் மூலம் ஆண்டி முர்ரே நடப்பு ஐரோப்பிய ஓபன் டென்னிசில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதில் அவர் ஏடிபி தரவரிசையில் 14ம் இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மானுடன் மோதவுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்