டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி
2021-10-20@ 15:22:24

ஒடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். அதே போல் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை எதிர்த்து துருக்கியை சேர்ந்த நெஸ்லிஹான் ஜித் மோதினார். இதில் 21-12, 21-10 என்ற புள்ளி கணக்கில், அவரை சிந்து வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ஜோடியை எதிர்த்து, இங்கிலாந்தின் கேல்லம் ஹெம்மிங் மற்றும் ஸ்டீவன் ஸ்டால்வுட் ஜோடி மோதியது. இதில் இந்திய ஜோடி 23-21, 21-15 என்ற செட் கணக்கில், இங்கிலாந்து ஜோடியை வீழ்த்தி, அடுத்து சுற்றுக்கு முன்னேறியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் காந்த் கிதம்பியை எதிர்த்து, சக வீரர் சாய் பிரனீத் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-11 என 2 செட்களில் வெற்றி பெற்றார்.
மேலும் செய்திகள்
ரூட் - பேர்ஸ்டோ அபார ஆட்டம் இமாலய இலக்கை விரட்டி இங்கிலாந்து அணி சாதனை: தொடரை சமன் செய்து அசத்தல்
சில்லி பாய்ன்ட்...
விம்பிள்டன் டென்னிஸ் 34 வயது மரியா முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி!
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா
மாஸ்டர்ஸ் மகளிர் உலக கோப்பை: இங்கிலாந்து செல்லும் இந்திய ஹாக்கி அணி
வங்கதேசத்துடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!