கோத்தகிரியில் பொலிவிழந்து காணப்படும் நேரு பூங்கா
2021-10-20@ 12:08:38

கோத்தகிரி : கோத்தகிரியில் பராமரிப்பு இன்றி நேரு பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. கோத்தகிரியில் உள்ள நேரு பூங்கா சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்டு கோத்தகிரி பேரூராட்சி மூலம் பாராமரிக்கப்பட்டு வரும் பூங்காவாகும். இங்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் கொண்டாடப்படும் கோடைவிழாவின் தொடக்கமாக காய்கறி கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக அதுவும் நடைபெறவில்லை. தற்போது, நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் தொடங்கி மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் மற்றும் மாவட்டத்தில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்கா பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்படுகிறது.
மேலும், பூங்காவின் நடைபாதையில் உள்ள சங்கிலியால் அமைக்கப்பட்ட வேலிகள் முறிந்தும், சிறு தடுப்புகள் இடிந்தும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் புல் தரைகளில் காட்டுச் செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இந்த சூழலில் மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பொதுவாக மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு கோத்தகிரி வழியாக சமவெளிப் பகுதிகளுக்கு செல்லும் போது கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவை பார்வையிடுவது வழக்கம்.
ஆனால், தற்போது எந்தவொரு பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால் அந்த நிலையும் மாறி சுற்றுலா பயணிகள் இன்றி பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, பூங்காவை நன்கு பராமரித்து பூங்காவை சுற்றி முற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து நன்கு பராமரிக்கப்பட வேண்டும் எனவும், சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும் செய்திகள்
நெகமத்தில் குதிரை பந்தயம்
கிணத்துக்கடவு அருகே நரிக்குறவர் காலனியில் பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர கோரிக்கை
தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை சரிகிறது-விவசாயிகள் வேதனை
கரூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு
சுற்றுவட்டாரத்தில் பரவலான மழையால் மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைந்தது-கூடுதல் விலைக்கு விற்பனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து தேங்காய் விலை சரிவால் தென்னை விவசாயிகள் கவலை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்