கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
2021-10-20@ 00:01:29

ராதாபுரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அத்துமீறி நுழைந்தவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் அணு மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடந்து வரும் நிலையில் 3 மற்றும் 4வது அணு உலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அணு உலைகளின் பாதுகாப்பிற்காக வளாகத்தை சுற்றிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு நீர் குழாய் வழியாக அத்துமீறி நுழைந்த ஒருவரை மத்திய பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் சுனாமி காலனியை சேர்ந்த அலங்காரராஜ் (55) என்பது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட அவர் கடலோரமாக நடந்து வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு நீர் குழாய் வழியாக உள்ளே நுழைந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்
காதல் மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த மாமியார்: குழவிக் கல்லை போட்டு கொன்ற மருமகன் கைது
கோயம்பேட்டில் தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் தகராறு வாலிபருக்கு தலையில் கத்தி வெட்டு; நண்பர் கைது
புளியந்தோப்பில் கோயிலை உடைத்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது
வெளிநாடு கடத்த இருந்த ரூ.2 கோடி உலோக சிலைகள் மீட்பு-மயிலாடுதுறை அருகே ஒருவர் கைது
ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்க சென்ற 45 வயதான மீனவ பெண் பலாத்காரம் செய்து, எரித்து கொலை : ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது!!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!