SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மவுனம் வேண்டாம்

2021-10-19@ 00:17:14

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதற்கு பதிலளிக்காமல் ஒன்றிய அரசு மவுனமாக இருப்பது ஏன்? விலை உயர்ந்தாலும், மக்களின் பயன்பாடு குறையவில்லை. எனவே மக்கள் வசதியாக இருக்கிறார்கள் என்று ஒன்றிய அரசு நினைத்து விடக்கூடாது. மக்கள் சந்தித்து வரும் இன்னல்கள், அவர்கள் படும் வேதனை குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்க வேண்டியது கட்டாயம்.
வளர்ச்சி என்ற வார்த்தை மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லாது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். ‘‘மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறோம்’’ என ஒன்றிய அரசு கூறுகிறது.

உண்மையில் நிலைமை தலைகீழாக உள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால், மக்களை திண்டாட வைப்பதுதான் ஒன்றிய அரசின் சாதனையா? ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றால், வளர்ச்சியை ஒருபோதும் எட்ட முடியாது. மக்கள் மீது ஒன்றிய அரசுக்கு எவ்வளவு பாசம் உள்ளது என்பதை, அவ்வப்போது நடந்து வரும் சம்பவங்கள் அழுத்தமாக உணர்த்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்காமல் மவுனம் காப்பது ஏன்? வேறொரு பிரச்னையை கையில் எடுப்பதன் மூலம், லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை மக்கள் மறந்து விடுவார்கள் என ஒன்றிய அரசு எண்ணுகிறது.

விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசிடம் இருந்து ஆக்கப்பூர்வமான பதில் கிடைக்கும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாடு வளர்ச்சி என்ற பாதையில் பயணிப்பதாகவும், பொருளாதாரம் உயர்ந்து வருவதாகவும் ஒன்றிய அரசு கூறுகிறது. உலகளாவிய பட்டினி குறியீட்டில் மொத்தமுள்ள 116 நாடுகளில், இந்தியா 101வது இடத்தில் உள்ளது. முக்கியமாக, பெரும் வளர்ச்சி அடையாத நாடுகள் கூட இந்தியாவை விட முன்னேறிய நிலையில் இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறதா அல்லது பின்னோக்கி செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கைச்சூழலைக் கொண்டே வளர்ச்சியை தீர்மானிக்க முடியும்.

மக்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து ஒன்றிய அரசு வெளிப்படையாக பேசவேண்டும். மக்களின் வாழ்வாதாரம் முன்னேறினால் மட்டுமே வளர்ச்சி என்ற இலக்கை அடைய முடியும். பேச்சு மூலம் வளர்ச்சியை ஒருபோதும் எட்ட முடியாது. சிறு, குறு தொழில்களை ஊக்குவித்து, அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். நாட்டையே உலுக்கியுள்ள முக்கிய சம்பவத்தில் ஒன்றிய அரசு மவுனமாக இருப்பதை மக்கள் விரும்பவில்லை. மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள். தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்