‘ஒரே நாடு; ஒரே கார்டு’ திட்டம் மூலம் ரேஷன் கார்டில் மேலும் கட்டுப்பாடு வருது! மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை
2021-10-18@ 21:41:35

புதுடெல்லி: ‘ஒரே நாடு; ஒரே கார்டு’ திட்டம் மூலம் ரேஷன் கார்டில் மேலும் கட்டுப்பாடு கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் தகவல்களின்படி, ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ், இதுவரை 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட நாட்டின் மக்கள் தொகையில் 86 சதவீத மக்கள், இத்திட்டத்தில் இணைக்கப்பட்டனர். சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது சொந்த இடத்திற்கு மாற்றாக எந்தவொரு மாவட்டம், மாநிலங்களிலும் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ரேஷனில் உணவுப் பொருட்களை பெறுகின்றனர். அவர்களில் பலர், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளனர்.
அவர்களுக்கு மேலும் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்காக, பொது விநியோக திட்ட முறையில் மாற்றங்களை செய்ய ஒன்றிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் முற்றிலும் வெளிப்படைதன்மையுடன் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே கூறுகையில், ‘ரேஷன் கார்டின் தரத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசுகளுடன் கடந்த ஆறு மாதமாக ஆலோசனை நடத்தி உள்ளோம். மாநிலங்கள் அளித்த பரிந்துரைகளுடன் சேர்த்து புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை விரைவில் இறுதி செய்யப்படும். புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது, தகுதியான நபர்கள் மட்டுமே ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை பெறமுடியும். தகுதியற்ற நபர்கள் பயனடைய முடியாது. போலிகளை முழுமையாக ஒழிக்க முடியும்’ என்றார்.
Tags:
ஒரே நாடு; ஒரே கார்டுமேலும் செய்திகள்
பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம்; லீனா மீது டெல்லி போலீஸ் வழக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம்
அதிமுகவை முடக்கப் பார்க்கிறார் ஓபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு..!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு.: அடுத்த கூட்டத்துக்கான தேதி குறிப்பிடவில்லை
ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது...அமைச்சர் சக்கரபாணி உரை
இரட்டை மடிப்பு வலை விவகார வழக்கு; இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதால் பரபரப்பு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!