ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் உறுதி செய்வதுதான் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பணி: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
2021-10-18@ 12:33:45

லக்னோ : ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் உறுதி செய்வதுதான் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் பணி என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார் . உத்தரப் பிரசேதம் ராம்பூரில் உள்ள மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் சுமார் 2000 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பல வகை மருத்துவ உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கான்பூரில் உள்ள அலிம்கோ நிறுவனம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, நடக்க உதவும் ஊன்றுகோல், காதுகேட்கும் கருவிகள் உட்பட பல பொருட்களை இலவசமாக வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், ‘‘ கடந்த 7 ஆண்டுகளில் சிறந்த நிர்வாகம், அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் ஏழைகளின் மேம்பாட்டில் மத்திய அரசு கவனம் செலுத்தியது. ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் உறுதி செய்வதுதான் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் பணி’’ என கூறினார்.ராம்பூர் நுமைஸ் மைதானத்தில் நடத்தப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சியையும் நக்வி பார்வையிட்டார். இதில் 30 மாநிலங்களைச் சேர்ந்த 700 கைவினை கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
Tags:
பிரதமர் நரேந்திர மோடிமேலும் செய்திகள்
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சாமானிய மக்களுக்கு பலன் தரும் பட்ஜெட்; வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..!
ஜெகன் அண்ணா காலனியில் வீடுகள் கட்டும் பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும்-சித்தூர் ஆணையாளர் உத்தரவு
திருப்பதி பைரெட்டிபள்ளி பகுதியில் ₹3.25 கோடியில் புதிய சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள்-எம்பி தகவல்
உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது குழந்தைகளின் உடல்நலம், கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்-ஆய்வு செய்த கலெக்டர் உத்தரவு
மத்திய பிரதேசம் மது கடைகளில் கோசாலைகளை தொடங்க போகிறேன்: உமா பாரதி ஆவேசம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!