8வது மாடியில் இருந்து மாணவன் தவறி விழுந்து பலி
2021-10-18@ 00:22:10

பூந்தமல்லி: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் நவீன்குமார்(21), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பி.டெக் பயோமெடிக்கல் 4ம் ஆண்டு படித்துவந்தார். செம்பரம்பாக்கத்தில் உள்ள 18 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு பக்கத்து அறையில் நண்பனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நவீன்குமார், மது அருந்தி உள்ளார். இவரது அறையின் சாவி மற்றொரு நண்பரிடம் இருந்துள்ளது. இதனால் 8வது மாடியில் இருந்து பின்பக்க பைப்லைன் மூலம் ஜன்னல் வழியாக தனது அறைக்கு செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் தங்கி இருப்பதாகவும், போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்குவதாகவும் அங்குள்ள குடியிருப்புவாசிகள் புகார் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்