திருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், விளம்பர போர்டு அகற்றம்
2021-10-17@ 19:32:44

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், கடைகளின் விளம்பர போர்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். திருவொற்றியூர் மண்டலம் 12வது வார்டுக்கு உட்பட்ட சாத்தங்காடு பிரதான சாலையை தனியார் பலர் ஆக்கிரமித்து திருமண மண்டபம், கடை மற்றும் கடைகளின் விளம்பர போர்டுகள் அமைத்திருந்தனர். இதனால் மாநகர பேருந்து, பிற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், திருவொற்றியூர் மண்டல அலுவலர் பால்தங்கதுரை, செயற்பொறியாளர் உசேன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் மற்றும் உதவி பொறியாளர்கள், சாத்தங்காடு பிரதான சாலை பகுதிக்கு போலீசாருடன் வந்தனர். பின்னர், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட கடைகள், கடைகளின் விளம்பர போர்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சாத்தங்காடு பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடை கட்டினாலோ, விளம்பர போர்டு வைத்திருந்தாலோ அவற்றை அப்புறப்படுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
போரூர் மின்சார மயான பூமியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி: பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு; ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை: கபில் குமார் சரட்கர் பேட்டி
மதிமுக நிர்வாகிகள் 3 பேர் அதிரடி நீக்கம்: வைகோ அறிவிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50 மட்டுமே: ஒன்றிய பாஜ அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
ஒரு ஆதரவாளர் கூட கிடைக்காமல் ஓபிஎஸ் திண்டாட்டம்; ராஜ்யசபா அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் தொடர் இழுபறி: எடப்பாடி பழனிச்சாமி திடீர் கெடு
டூ வீலர்கள் திருட்டு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை