சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார் சசிகலா: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிப்பு
2021-10-17@ 11:04:28

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை சசிகலா ஏற்றினார். அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தனார். எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள நினைவில்லத்தில் பொன்விழா ஆண்டு கொடியேற்றம் நிகழ்வையொட்டி கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி தொடங்கி இன்றோடு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, 50-வது ஆண்டு பொன்விழா தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியின் பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொண்டர்கள் படைசூழ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் வட்டம், கிளைக்கழகம் சார்பில் அ.தி.மு.க. கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.
மேலும் செய்திகள்
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் முன்னிலையில் Pacedigitek என்ற நிறுவனத்துடன் முதன்மைச் சேவை ஒப்பந்தங்கள் கையெழுத்து
சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33%ஆக உயர்த்த நடவடிக்கை: வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்..!
தமிழகத்தில் ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!