SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன்மோகன் சிங்குக்கு டெங்கு: எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

2021-10-17@ 00:39:52

புதுடெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் சென்றார். அப்போது, தங்களின் விருப்பத்தையும் மீறி அவருடன் புகைப்பட கலைஞரையும் அழைத்து சென்றதாக மன்மோகன் சிங்கின் மகள் தாமன் சிங் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், மன்மோகன் சிங்கின் உடல் நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `மருத்துவ சோதனைகளின் மூலம்  மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அவரது உடல்நிலையில் சீரடைந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

  • Republic Day Chennai

    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்

  • tamil-mozhi-25

    தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்