SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு தாக்குதலை ஈஸியாக கட்டுப்படுத்தலாம்: வேளாண்துறையினர் ‘டிப்ஸ்’

2021-10-16@ 12:53:31

திண்டுக்கல்:வேளாண்துறை இணை இயக்குனர் பாண்டித்துரை தகவல்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி மற்றும் பழனி வட்டாரங்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், மதுரை பூச்சியியல் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் திண்டுக்கல் வேளண்மை உதவி இயக்குநர் தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு உமா தலைமையில் குழு ஆய்வு செய்துள்ளனர். இதில் மக்காச்சோளம் இளம்பயிரில் படைப்புழு தாக்குதல்கள் கண்டறியப்படவில்லை. 25 முதல் 40 நாட்களான பயிரில், படைப்புழு தாக்குதல்கள் கண்டறியப்பட்டுள்ளது. படைப்புழு தாக்குதல் தற்போது பொருளாதார சேத நிலைக்கு குறைவாக உள்ளது. எனவே விவசாயிகள் தங்களது மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் தென்பட்டால், உடனடியாக தங்கள் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

படைப்புழு தாக்குதல் தென்பட்டால், குளோர் ஆன்டரிநில்ப்ரோல், அல்லது புளுபெண்டமைடு மருந்துகளை தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் செடிகளின் குருத்துப் பகுதிகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். 15 நாடகள் கழித்து இரண்டாம் முறையாக (தேவைப்பட்டால்) அசோடிராக்டின் தெளிக்க வேண்டும். பூச்சி கொல்லிகளை கண்டிப்பாக விசைத் தெளிப்பான்கள் மூலம் தெளிக்க கூடாது. மேலும் ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைத்து படைப்புழு அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்குமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.அதை போல் பயிரின் வயது 26 முதல் 45 நாட்களுக்குள் இருக்கும்பொழுது எமாமெக்டின் பென்சோயேட் , அல்லது ஸ்பைனிடோரம் , நோவலூரான் தெளிக்கவும். தேவைப்படும் தருவாயில் மெட்டாரைசியம் அனிசோபிலியே 1 கிலோ ஏக்கருக்கு தெளிக்கவும். விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்கும்போது மேற்குறிப்பிட்ட பூச்சி கொல்லிகளை 3 மடங்கு அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் என ெதரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sc-maha-24

  மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

 • jammu-vaccine-24

  கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

 • republic20222

  டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்