SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்திக்கு லீவ் கிடையாது!: புதுச்சேரியில் 2022ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு..!!

2021-10-13@ 15:56:38

புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலில் இருந்து மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கான அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை புதுச்சேரி அரசு வெளியிடும். அதன்படி, 2022ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி சேர்க்கப்படவில்லை. இது தொழிலாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காதது தொழிலாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதற்கு சான்றாகும் என்று தொழிற்சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய இரு நாட்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பு செயலர் கிரண் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநரின் உத்தரவுப்படியே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் அரசு விடுமுறை தினங்களை ரத்து செய்வது வழக்கமான நடைமுறை தான் எனவும் உயரதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் 2 தினங்கள் விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. முந்தைய ஆண்டுகளை போல 2022ம் ஆண்டிலும் மே 1ம் தேதி தொழிலாளர் தின விடுமுறையை அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

  • draw-18

    அழகிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை..!!

  • kerlaaeaa1

    த(க)ண்ணீரில் கதிகலங்கும் கடவுளின் தேசம் : வெள்ளம், நிலச்சரிவால் 35 பேர் பலி!!

  • Goamuseummm1

    கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்