அஜய் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்காதவரை விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை : எம்.பி. ராகுல் காந்தி பேட்டி
2021-10-13@ 12:28:05

டெல்லி : டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு சந்தித்துள்ளது. லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராகுல்காந்தி முறையிட்டார் லக்கீம்பூர் கேரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கடந்த சனியன்று உத்தரப்பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலான 7 பேர் கொண்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளது. காங்கிரஸ் பிரதிநிதிகள் கூட்டத்தில் கார்கே, மூத்த தலைவர்கள் ஏகே அந்தோனி, குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ப்ரியங்கா காந்தி மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அப்போது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ப்ரியங்கா காந்தி,லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம் தொடர்பாக இன்றே ஒன்றிய அரசுடன் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி தங்களுக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருக்க நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். லக்கிம்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.அஜய் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்காதவரை விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை.உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் லக்கிம்பூர் விவகாரத்தை விசாரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம்,'என்றார்.
மேலும் செய்திகள்
மகாராஷ்டிராவில் 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.390 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்..!!
2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா... 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
எல்லையில் பதற்றம்; காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!