SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காற்று மாசை குறைக்க வரும் 18ம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, எஞ்சின்களை நிறுத்துவது கட்டாயம் : டெல்லி அரசு அதிரடி!

2021-10-13@ 11:33:19

டெல்லி : காற்று மாசை குறைக்க வரும் 18ம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் தலைநகர் டெல்லி கடுமையான காற்று மாசுபாட்டால் பெரும் சிரமங்களை சந்திக்கும்.இதனை குறைக்க பல்வேறு திட்டங்களை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரத்தில் ஒரு நாளாவது தங்களது வாகனங்களை பயன்படுத்தாமல், மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் காற்று மாசுபாடு தொடர்பான புகார்களை தெரிவிக்க க்ரீன் டெல்லி என்ற செயலி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் மாசு தொடர்பான புகார்களை பொது மக்கள் பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கும் இந்த திட்டம் வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் பொது மக்கள் உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

  • draw-18

    அழகிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை..!!

  • kerlaaeaa1

    த(க)ண்ணீரில் கதிகலங்கும் கடவுளின் தேசம் : வெள்ளம், நிலச்சரிவால் 35 பேர் பலி!!

  • Goamuseummm1

    கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்