காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் நிலம் மீட்பு: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடி நடவடிக்கை
2021-10-12@ 17:33:22

சென்னை: கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் நிலம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் கையகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் இதுவரை 132 கிரவுண்ட் இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளது.
இன்று ரூ.250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலங்கள் அனைத்தும் முறையாக 78 பேருக்கு நோட்டீஸ் கொடுத்து நிலம் கையகப்படுத்தி உள்ளோம். அறநிலையத்துறையில் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பதிவேடுத்துறை ஆரம்பித்தோம். இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால் தொலைபேசி எண்ணை அறிவித்தோம். அதன் மூலம், இதுவரை 4500 குறைகள் வந்துள்ளது.
இந்த குறைகள் தொடர்பாக மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம், விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எச்.ராஜாவின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் இந்து சமய அறநிலையத்துறை கருத்தில் கொள்ளாது. எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது என்பது போல் நினைத்துக்கொள்வோம். எச்.ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல. சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வழிபாட்டிற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விஜயதசமி அன்று கோயில் திறப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். திருநீர் மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மற்ற கோயில்களில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சாவூரில் கோயில் குளத்தை தூர்வாரிய போது: சோழர் காலத்து 7 உறை கிணறு கண்டுபிடிப்பு
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்