வேலூர் சார் பதிவாளர் ஆபீசில் ரெய்டு பதிவுத்துறை ஐஜிக்கு விஜிலென்ஸ் அறிக்கை
2021-10-12@ 00:30:35

வேலூர்: வேலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, இணை சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை பதிவுத்துறை ஐஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த 30ம் தேதி மாலை 4.40 மணிக்கு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு 12.30 மணி வரை சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் கழிவறை, கோப்புகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், வேலூர் இணை சார்பதிவாளர் வனிதா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பணம் பறிமுதல் மற்றும் வழக்கு சம்பந்தமான விரிவான அறிக்கை பதிவுத்துறை ஐஜி சிவன்அருளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வேலூர் விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இணை சார்பதிவாளர் வனிதா மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Tags:
Vellore Registrar Raid Registrar IG Vigilance Report வேலூர் சார் பதிவாளர் ரெய்டு பதிவுத்துறை ஐஜி விஜிலென்ஸ் அறிக்கைமேலும் செய்திகள்
தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது: மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரிக்கை
தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்களை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தல்
இயற்கையான நாட்டு காய்கறிகளை கொடுக்கும் உழவரையும், உழவர் சந்தையையும் என்றும் மறக்காதீர்
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் கட்டிடம் கட்டும் பணிகள் அடுத்த மாதம் துவங்கும்
கொள்ளிடம் ஆற்றில் தொடரும் வெள்ளபெருக்கால் கிராம மக்கள் தவிப்பு; நோய் தொற்று பரவும் அபாயம்- சுகாதார அதிகாரிகள் ஆய்வு
3-வது நாளாக மசினகுடி - கூடலூர் இடையே போக்குவரத்து நிறுத்தம்.: 80 கி.மீ. வரை சுற்றி செல்வதால் மக்கள் அவதி
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!