வேலூரில் இருந்து கோவைக்கு வளர்ப்பு மகளை கடத்தி பாலியல் பலாத்காரம்: கட்டிட தொழிலாளி சிறையில் அடைப்பு
2021-10-11@ 21:40:08

கோவை: வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (29).கட்டிடத் தொழிலாளி. இவர் அதே மாவட்டத்தை சேர்ந்த திருமணமான 31 வயது பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஆறு மாத ஆண் குழந்தை உள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே 13 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் வெற்றிவேல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது 13 வயது வளர்ப்பு மகளை கோவைக்கு கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், அந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் வந்த வெற்றிவேல் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக க..க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் வயது 13 என்பதும், வேலூரில் இருந்து அவரது தாய்க்கு தெரியாமல் கடத்தி வந்து திருமணம் செய்து பாலியல் தொல்லைக்குள்ளானதும் தெரிய வந்தது.
ஏற்கனவே சிறுமி மாயமானதாக வேலூரில் அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தை திருமணம், கடத்தல், கொலை மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வெற்றிவேலை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
உடலில் சூடு வைத்த கொடூரம் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது
மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே நள்ளிரவில் காரில் கடத்திச்சென்று பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது ஏன்? கைதான 6 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்
லாரி டிரைவர்களிடம் கத்திமுனையில் வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது
திருவள்ளூர் அருகே கடையில் பதுக்கி விற்பனை செய்த 4,100 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை காவலாளி கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை: நண்பர்கள் 4 பேருக்கு வலை
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!