வந்தவாசி- ஆரணி சாலை ஆயிலவாடியில் சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
2021-10-09@ 12:04:52

பெரணமல்லூர் : வந்தவாசி- ஆரணி சாலை ஆயிலவாடி பகுதியில் சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி- ஆரணி நெடுஞ்சாலையில் உள்ளது பெரணமல்லூர். இந்த பகுதி சென்னை, மேல்மருவத்தூர், திண்டிவனம், சென்னை, புதுச்சேரி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள ஆயிலவாடி பகுதியில் பிரதான சாலையில் சிறுபாலம் (கல்வெர்டு) அமைக்க பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது, அங்கு போதிய விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் அடிக்கடி விபத்துகள் நடந்தது.
பின்னர், அங்கு சிறுபாலம் கட்டப்பட்டது. ஆனால், அந்த பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் மேடும், பள்ளமுமாக அமைத்துள்ளனர். இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `இங்கு அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம் பணி முழுமை பெறவில்லை. அந்த இடத்தில் பகல் நேரங்களில் ஓரளவு சமாளித்து சென்றுவிடுகிறோம். இரவு நேரங்களில் வரும்போது கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க வேண்டும்’ என்றனர்.
மேலும் செய்திகள்
வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்
அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்