டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கு துணைவேந்தர் தேர்வு செய்ய குழு அமைப்பு
2021-10-09@ 00:03:37

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10வது துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் கடந்த 2018 டிசம்பர் 31ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவிக் காலம் வரும் டிசம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழுவை மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அமைத்துள்ளார்.
அந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மைசூரில் அமைந்துள்ள ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தர் டாக்டர் பி.சுரேஷ், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதய நல சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் எஸ்.தணிகாசலம் ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். தகுதியான நபர்களை தெரிவு செய்து, அதுகுறித்த பரிந்துரைகளை பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநருக்கு அக்குழு அனுப்ப உள்ளது. அதை பரிசீலித்து அவர்களில் ஒருவரை புதிய துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்.: அனைத்து அலுவலர்களுக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்: 40 லட்சம் வாடகை பாக்கி
கலைஞரின் மனச்சாட்சியாக அறியப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள் மரியாதை..!!
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!