இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைய முயற்சி
2021-10-08@ 12:04:44

தவாங்: இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன படைகள் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயற்சி செய்த போது மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய தவாங் பகுதியில் இந்த மோதல் சில மணி நேரங்கள் வரை நீடித்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. சீனப்படைகளை இந்திய படைகள் தடுத்து நிறுத்தியதாகவும், அதன்பிறகு இரு தரப்பிலும் உள்ளூர் படை தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இரு தரப்பில் இருந்தும் எந்த சேதமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. கிழக்கு எல்லைப்பகுதி லடாக் பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய சீன உயர்நிலை பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த மோதல் நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்திய சீன எல்லையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பதற்ற நிலையே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா... 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
எல்லையில் பதற்றம்; காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு
7 கட்சிகளின் ஆதரவுடன் 8வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ் பதவியேற்பு: துணை முதல்வரானார் தேஜஸ்வி
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!