SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்..!

2021-10-08@ 08:43:59

சென்னை: தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை 101 ரூபாயை தாண்டியிருப்பதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து 101 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் 34 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 60 காசுகளாக உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் ஒரு ரூபாய் 86 காசுகளும், டீசல் 2 ரூபாய் 43 காசுகளும் அதிகரித்துள்ளது. விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டீசலும் விரைவில் 100 ரூபாயை எட்டிவிடும் என்று சரக்கு போக்குவரத்து வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்