கர்நாடக மாநிலம் மைசூரில் உலக புகழ்பெற்ற தசரா திருவிழா கோலாகல தொடக்கம்!: சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை..!!
2021-10-07@ 14:33:25

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா திருவிழாவை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைத்தார். உலக புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் 411ம் ஆண்டு மைசூரு தசரா விழாவை முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து துவக்கி வைத்தார்.
கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மைசூருவில் தசரா விழா தொடங்கியதை தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் மாலையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துக் கொள்ளும் அதிகாரிகள், கலைஞர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மைசூரு அரண்மனைக்கு வருவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தாண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில் 2.2 கோடி வழக்குகள் தீர்வு; நேற்று மட்டும் 81 லட்சம் வழக்குகள் சமரசம்
பானையில் இருந்த குடிநீரை குடித்ததால் ஆசிரியர் தாக்கியதில் தலித் மாணவன் பலி; ராஜஸ்தான் பள்ளியில் வன்கொடுமை
கார் மீது மோதியதால் கோபம்; ஆட்டோ டிரைவருக்கு ‘பளார்’ .! நிதானத்தை இழந்த பெண் கைது
பீகார் முதல்வர், துணை முதல்வர் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு; காங்கிரசுக்கு 4 அமைச்சர்கள் உறுதி
பங்குச் சந்தையின் ‘பிக் புல்’ மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
பணமோசடி உள்ளிட்ட வழக்கில் சிக்கிய 3 ஜாம்பவான்களும் ஒரே சிறையில் அடைப்பு: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!