கொரோனாவால் மேலும் 10 கோடி பேர் ஏழைகளானர்.. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.3% ஆக இருக்கும் : உலக வங்கி கணிப்பு!!
2021-10-07@ 12:11:15

வாஷிங்டன்: 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் மேலும் 10 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் மட்டுமே 2020ம் ஆண்டில் 6.2 கோடியிலிருந்து 7.1 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்த ஆண்டு தெற்காசியாவில் 4.8 கோடியிலிருந்து 5.9 கோடி மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இதனிடையே 2021-2022ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.3%ஆக இருக்கும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.
தெற்காசிய பொருளாதாரம் குறித்த அறிக்கையில் இந்திய ஜிடிபி வளர்ச்சி 8.3% ஆக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.உள்நாட்டின் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்க மேற்கொண்ட திட்டங்களின் பயனாக பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த உலக வங்கி,
ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மோசமாக இருந்த போதிலும் பொருளாதார பாதிப்பு 2020ஐ விட குறைவுதான் என்றும் அடிப்படை கட்டமைப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களால் வளர்ச்சி கூடும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏற்படக்கூடிய பாதிப்பு, பணவீக்கம் போன்றவற்றால் வளர்ச்சி ஓரளவு பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது சீன உளவு கப்பல்: 22ம் தேதி வரை முகாமிடும் என அறிவிப்பு
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
இந்தியாவின் சுதந்திர தினம்; நியூயார்க்கில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்
நில மோசடி வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ.. வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒடிங்கா நூலிழையில் தோல்வி..!!
சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்தடைந்தது
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!