போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் பாஜக பிரமுகர்கள்.. ஷாருக்கான் மகனை கைது செய்து அழைத்து வந்த போதும் உடன் இருந்தனர்!!
2021-10-07@ 11:12:23

மும்பை ; ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மற்றும் அவரது நண்பரை கைது செய்து அழைத்து வந்த போது, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியுடன் இருந்தவர் தான் பாஜக கட்சியின் தீவிர விசுவாசி என தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சொகுசு கப்பலில் போதைப் பொருள் இருந்ததாக நடத்திய சோதனையே ஒரு நாடகம் என்றும் நடிகர் ஷாருக்கானுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக அவரது மகன் சிக்கவைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஆரியன் கான் மும்பை போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தை இருந்த போது, பாஜகவைச் சேர்ந்த மனிஷ் பன்சாலி மற்றும் கிரண் கோசவி ஆகிய இருவரும் அங்கு வந்து செல்வதும் ஆரியன்கான் உடன் செல்பி எடுத்துக் கொண்ட காட்சியும் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு வந்து சென்றதை மனிஷ் பன்சாலியும் ஒப்புக் கொண்டார்.தகவல் கொடுப்பதற்காக வந்து சென்றதாகவும் தாம் பாஜகவின் தீவிர விசுவாசி என்றும் அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஆரியன்கான் நண்பர் Arbaaz Merchant ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதை சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே தெரியும் என்றும் தான் இந்த வழக்கில் சிக்கவைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
17ம் தேதி திறக்கப்பட இருந்த நிலையில் புதிய தலைமைச்செயலகத்தில் தீ விபத்து: தெலங்கானாவில் அதிகாலை பரபரப்பு
கேரள பட்ஜெட் இன்று தாக்கல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைப்பு
இடைத்தேர்தலை அறிவிக்க 6 மாதம் அவகாசம் இருந்த போதிலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அவசர அவசரமாக அறிவித்தது ஏன்?: அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
பிபிசி ஆவணப்பட வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பொதுக்குழு தொடர்பான ஆவணங்களை ஏற்குமாறு தேர்தல் ஆணையத்திடம் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!