முதன்மை உணவாக மனிதன் இல்லை டி23 புலியை ஆட்கொல்லி புலியாக கருத முடியாது: முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் பேட்டி
2021-10-07@ 00:26:31

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் டி23 புலியை பிடிக்கும் பணி 12வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிட்ட பின்னர் தமிழக முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் அளித்த பேட்டி: டி23 புலி, மனிதர்களை கொன்றது குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருகின்றது. தினமும் புதிய வியூகங்களை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தி டி23 புலியை பிடிக்க முயன்று வருகிறோம். புலியின் பாதுகாப்பு, வனத்துறையினரின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் வைத்து பணிகள் நடைபெறுகிறது.
சிங்காரா வனப்பகுதியில் இந்த புலியின் தடயங்கள் இருப்பதால் அங்கு கண்காணிப்பு பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. வயதான காரணத்தால் அதற்கு வேட்டையாட முடியாத நிலை உள்ளது. சிங்காரா வனப்பகுதியில் பரண்கள் அமைத்தும், மன்றாடியார் வனப் பகுதியில் ரோந்து பணிகள் மூலமும், தெர்மல் டிரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதன்மை உணவு மனிதர்களாக இருந்தால் மட்டுமே அதனை ஆட்கொல்லி புலியாக கருத முடியும். இந்தப்புலி இதுவரை மாடுகளையும், அதனை மேய்ப்பவர்களையுமே தாக்கி வருகிறது.
புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வகையில் மருத்துவ குழுவினர் மூலம் கண்காணித்து அதன் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 4 பேர் இறப்பில் முதல் இரு மரணம் இந்த புலியால் நடந்தது என்பதை உறுதிப்படுத்தவில்லை. இதனை டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். வரும் காலங்களில் பிரச்னைக்குரிய புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடியும். ரேடியோ காலர்களின் எடையும் 5 கிலோ வரை இருக்கும் என்பதால் அதற்கு பிரச்னை இருக்காது. இதற்காக, டெல்லியில் இருந்து ரேடியோ காலர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது. தன்னார்வலர்களின் செயல்பாடுகளையும் இந்த புலியை பிடிக்க பயன்படுத்தி கொள்கிறோம். காடுகளில் வாழும் புலி 14 வருடம் வரை இருக்கும். வன உயிரின பூங்காகளில் அடைத்து அவற்றை பாதுகாக்கும் போது கூடுதலாக 10 ஆண்டுகள் வரை உயிருடன் வாழும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Intake of primary food no man D23 tiger killer tiger primary chief wildlife conservationist interview முதன்மை உணவாக மனிதன் இல்லை டி23 புலி ஆட்கொல்லி புலி முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் பேட்டிமேலும் செய்திகள்
ஆனி சுவாதி உற்சவத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் இன்று காலை செப்பு தேரோட்டம்; பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
மாணவியை கடத்தி வாலிபருக்கு திருமணம்; 2 பெண்கள் கைது!
பக்ரீத் பண்டிகையை யொட்டி ஒட்டன்சத்திரம் ஆட்டுசந்தையில்; 2 கோடி ரூபாய்க்கு விற்பனை
ஜாமீன் தர நீதிபதி நிபந்தனை குழந்தை பெற்ற காதலிக்கு தாலி கட்டிய காதலன்
வாலிபர் அடித்துக் கொலை; மனைவி, க.காதலனுக்கு ஆயுள் தண்டனை
உத்திரமேரூர் அருகே 22 ஏக்கர் அரசு நிலம் மீட்பு!
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..