துணை ஜனாதிபதி வருகையின் போது மேகாலயாவில் வெடிபொருள் கண்டெடுப்பு
2021-10-05@ 00:24:44

ஷில்லாங்: மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் தேசிய மக்கள் கட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே நேற்று பிற்பகல் மர்ம பை ஒன்று கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கட்சி உறுப்பினர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் அங்கு விரைந்தனர். சோதனையில் அலுவலக நுழைவு வாயிலில் கிடந்த மர்ம பையில் சுமார் 2 கிலோ சக்திவாய்ந்த வெடிப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அதனை உடனடியாக அகற்றிய போலீசார் பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர். இந்த சம்பவத்துக்கு ஹைனீவ்ரெப் தேசிய விடுதலை கட்சி (எச்என்எல்சி) பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
ஷில்லாங்கில் நடைபெற இருந்த சாலை திட்ட தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு நேற்று சென்றிருந்த நிலையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Vice President Visits Meghalaya Explosives Discovery துணை ஜனாதிபதி வருகை மேகாலயா வெடிபொருள் கண்டெடுப்புமேலும் செய்திகள்
2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா... 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
எல்லையில் பதற்றம்; காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு
7 கட்சிகளின் ஆதரவுடன் 8வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ் பதவியேற்பு: துணை முதல்வரானார் தேஜஸ்வி
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!