SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரகாஷ்ராஜால் படப்பிடிப்பு நிறுத்தம்

2021-10-01@ 01:30:54

சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜால் விருமன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் தேனி சென்றிருந்த படக்குழுவினர் சென்னை திரும்பினர். குட்டிபுலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதில் கார்த்தி ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். படத்துக்கு விருமன் என தலைப்பிட்டுள்ளனர்.

இதில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமானார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை தேனியில் படமாக்க முத்தையா, ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் அங்கு சென்றுவிட்டனர். ஆனால் கால்ஷீட் கொடுத்தபடி தேனிக்கு பிரகாஷ்ராஜ் வரவில்லை. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, படக்குழுவினர் சென்னை திரும்பினர். பிரகாஷ்ராஜ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

இதேபோல், ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் யானை. இந்த படத்திலும் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமானார். ஆனால் சொன்னபடி அவர் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டனர். இப்போது அந்த வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sri_langa

    மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

  • sydney-snow-27

    மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!

  • modistaaa

    ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!

  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்