நேரடி வகுப்புக்கு எதிரான மனுவை ஏற்கக்கூடாது: தனியார் பள்ளிகள் ஐகோர்ட் கிளையில் மனு
2021-10-01@ 01:28:52

மதுரை: கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், நேரடி வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி தனியார் பள்ளிகள் நிர்வாக கூட்டமைப்பின் சார்பில் ஒரு மனு செய்யப்பட்டது. அதில், ‘‘கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த கல்வி முறையும் பாதித்துள்ளது. ஆன்லைன் கல்வி என்பது குழந்தைகளுக்கு போதுமானதல்ல. பல மாணவர்கள் மனரீதியாகவும், கண்கள் பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர்.
ஏழை மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் வசதி குறைவு. 175 நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 1.60 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குழந்தைகள் பாதிப்பர் என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை. எனவே, நேரடி வகுப்பிற்கு எதிரான மனுவை ஏற்கக்கூடாது’’ என்று கூறப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
விவசாய பயன்பாட்டிற்கு 1022 மெட்ரிக் டன் உரங்கள் பழநிக்கு ரயில் மூலம் வருகை
கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து இடியும் அபாயம் அரசு மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம் : மாணவர்கள் கோரிக்கை
10 வருடங்களாக கண்டுகொள்ளாத அதிமுக அரசு நாயோடை நீர்தேக்கத்தை தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பராமரிப்பில்லை சிதலமடைந்து கிடக்கும் நவீன ஆடுவதை கூடம்: சீரமைக்க கோரிக்கை
புதுப்பொலிவுடன் செயல்படும் உழவர் சந்தைகள் 250 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் தினசரி விற்பனை : 60 ஆயிரம் நுகர்வோர் பயன்பெறுகின்றனர்
பிளவக்கல் அணைக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் விழுந்தது ஓட்டை: சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!