SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி தடை இல்லை

2021-09-30@ 00:04:38

தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வரும் அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் துவங்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிலையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவ-மாணவிகள், பள்ளி செல்லாமல்‌ பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும்‌ மன அழுத்தத்தையும்‌, சமுதாயத்தில்‌ கற்றல்‌ இடைவெளியையும்‌, இழப்பையும்‌ ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள்‌, கல்வியாளர்கள்‌, பெற்றோர் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து முதல்வர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நவம்பர் 1ம் தேதி இதர வகுப்புகளும் திறக்கப்பட உள்ளதால், சுமார் 20 மாதங்களுக்கு பிறகு அனைத்து வகுப்புகளும் முழுமையாக இயங்க உள்ளன. இந்த முடிவு சரிதானா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பில், சிறுவர்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக உள்ளது.

இதனால் மாணவ, மாணவிகள் மத்தியில் நோயின் தாக்கம் அதிகம் பரவுவதில்லை. பள்ளிக்கு செல்வதால்தான் கொரோனா பரவுகிறது என்பது தவறான தகவல் என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் முழுமையாக திறக்கப்பட உள்ளதால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள், அதிலிருந்து விடுபட்டு, நேரடி வகுப்புகளில் பங்கேற்க உள்ளதால், மன ரீதியாக மகிழ்ச்சியில் உள்ளனர்.

நேரடி வகுப்புகள் மிக விரைவில் துவங்க உள்ளதால், இனி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். காரணம், கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனா நமக்கு எண்ணற்ற பாடங்களை கற்றுத் தந்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் என அனைத்து வழி முறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். இவற்றை, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவரும் கடைபிடித்தால் கொரோனா நம்மை விட்டு விலகியே நிற்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்