3 மக்களவை, 30 பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 30ல் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
2021-09-29@ 00:44:59

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று, வெள்ளம், பண்டிகை, குளிரான சூழ்நிலைகள் என பல்வேறு காரணங்களை ஆராய்ந்தும், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துக்களை கேட்டறிந்தும், பல்வேறு மாநிலங்களில் தற்போது காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கும், 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. நவம்பர் 2ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி, ம.பி. உள்ள கந்த்வா மற்றும் தாத்ரா நாகர்ஹவேலி ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும். இதேபோல், ஆந்திராவில் 1, அசாம் 5, பீகார் 2, அரியானா 1, இமாச்சலப் பிரதேசம் 3, கர்நாடகா 2, மத்தியப் பிரதேசம் 3, மகாராஷ்டிரா 1, மேகாலயா 3, மிசோரம் 1, நாகாலாந்து 1, ராஜஸ்தான் 2, தெலங்கானா 1 மற்றும் மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும்.
Tags:
3 Lok Sabha 30 Assembly constituencies by-elections on October 30 Election Commission 3 மக்களவை 30 பேரவை தொகுதி அக்டோபர் 30ல் இடைத் தேர்தல் தேர்தல் ஆணையம்மேலும் செய்திகள்
கோட்டயம் அருகே இரட்டை ரயில் பாதை பணிகள் நாகர்கோவில் ரயில் உட்பட 21 ரயில்கள் ரத்து
2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
ஆட்சேர்ப்பு முறைகேடு சம்பவத்தில் புதிய வழக்கு; லாலு வீட்டில் சிபிஐ சோதனை.! பீகாரில் பரபரப்பு
சிந்தனை அமர்வு கூட்டத்தை தொடர்ந்து ராகுல் காந்தி லண்டன் பயணம்; 23ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலையில் உரை
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிக்கு நிவாரணம் தரமுடியாது: நீதிபதிகள் உத்தரவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்