கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் குறுகிய தூர ஏவுகணை வடகொரியா சோதனை
2021-09-29@ 00:44:50

சியோல்: அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற உலக நாடுகள், ஐநா போன்ற அமைப்புகளின் தடைகள், எதிர்ப்புகளையும் மீறி, வடகொரிய கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரயிலில் இருந்தும் கூட ஏவி சோதனை செய்து, பரபரப்பை ஏற்படுத்தியது. வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை வீசி சோதனை நடத்தியது. இந்நிலையில், வடகொரியா மலைப்பாங்கான ஜகாங் மாகாணத்தில் இருந்து குறுகிய தூர ஏவுகணையை வீசி நேற்று சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை வடகிழக்கு கடலில் போய் விழுந்தது. இதனால், தென் கொரியாவும் ஜப்பானும் பீதி அடைந்துள்ளன.
இதையடுத்து, தேசிய பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை தென்கொரியா கூட்டியது. அதில், வடகொரியாவின் குறுகிய தூர ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்தது. இது குறித்து அமெரிக்க இந்தோ-பசிபிக் அதிகாரி, ‘வடகொரியாவின் இந்த சட்ட விரோத செயல், ஆயுத பரவல் தடை சட்டத்தை சீர்குலைக்கும். தென் கொரியா, ஜப்பானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா கேடயமாக இருக்கும்,’ என்று தெரிவித்தார். தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம்ஜாங் கடந்த 24ம் தேதி தெரிவித்தார். அதை தென்கொரியா வரவேற்ற நிலையில், வடகொரியா இந்தி புதிய ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.
Tags:
Korean Peninsula Tension Short Range Missile North Korea Test கொரிய தீபகற்ப பதற்றம் குறுகிய தூர ஏவுகணை வடகொரியா சோதனைமேலும் செய்திகள்
அந்தமான் தீவுகளில் 7 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
ஒருநாளுக்கான எரிபொருள் மட்டுமே உள்ளது; இலங்கையில் பள்ளிகள் மூடல்: போக்குவரத்து முழுவதும் முடங்கியது
வாடிகனில் பரபரப்பு போப் ராஜினாமா?
அந்தமான் அருகே அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம்: சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து
மகாபாரத இதிகாசத்தை இயக்கிய பிரபல நாடக இயக்குனர் மரணம்
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக இலங்கையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!