SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதயத்தை பாதுகாப்போம்...!

2021-09-29@ 00:02:52

உலக இதய தினம் கடந்த 1999-ம் ஆண்டு வரை செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பின்னர், உலக இதய கூட்டமைப்பின் மூலம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் அதிகப்படியான மரணம், மாரடைப்பால் தான் ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சி மூலம் தெரியவருகிறது.  மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் அது தொடர்பான வேறு எந்த இதய நோய்களையும் தவிர்க்க வெவ்வேறு தடுப்பு படிகள் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஊக்குவிக்க இந்த நாள் நினைவு கூறப்படுகிறது. மேலும், தற்போது உள்ள கொரோனா காலத்தில் இதயத்தை பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று.

இதய பாதிப்பினால் வருடத்திற்கு 18.6 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு, உடல் பருமன் மற்றும் காற்று மாசு உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்பு ஏற்படுவதாக உலக இதய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ‘‘யூஸ் ஹார்ட் டூ கனெக்ட்” என்பதை நோக்கமாக கொண்டுள்ளனர். வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாகவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாகவும் இதய நோய் பாதிப்பை குறைக்க முடியும். புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை.

இதனால், இதய நோய் மற்றும் வலிப்பு நோய் உண்டாகிறது.  உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு. பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம். உலக அளவில், பத்துக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிக எடை, இதய நோய் மற்றும் வலிப்பு நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும். சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகளும் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் வருவதைத் தடுக்க உதவுகின்றன.

வெறுமனே உடற்பயிற்சியில் மட்டும் ஈடுபடாமல் தினமும் விளையாடுவது, சைக்கிள் அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது. சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது. 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம். ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது, எண்ணெய் உணவு பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது. நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது, மேலும், 30 வயதிற்கு மேல் உள்ளோர் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும், 40 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறையும், இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omicron virus

  ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

 • parliament session 01

  பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

 • mkstalin_011221

  கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

 • delhi-air-1

  மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

 • aids-1

  வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்