SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் நியமனம்

2021-09-28@ 12:20:12

டெல்லி : காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசானது காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது.உச்ச நீதிமன்றம் உத்தரவினால் காவிரி நதிநீர் பிரச்னைகளை தீர்பபதற்கும், நதிநீர் பகிர்வு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் இந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த எஸ்.கே.ஹல்தர் காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரின் பதவி காலம் வருகின்ற 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக இருந்த எஸ்.கே.ஹல்தர் நிரந்தர தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், 'காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழுநேரத் தலைவராக செளமித்ர குமார் ஹல்தாரை நியமனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்கும் நாளிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் முழுநேரத் தலைவராக செயல்படுவார்.மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர் நவம்பர் 31-ம் தேதி ஓய்வுபெறுகிறார். ஓய்வுக்குப் பிறகு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஹல்தர் ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sri_langa

    மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

  • sydney-snow-27

    மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!

  • modistaaa

    ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!

  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்