SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோட்டயத்தில் பெற்றோருக்கு பயந்து ஒரே மரத்தில் காதல்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

2021-09-27@ 21:50:36

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் அருகே குலசேகரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கலாதரன். அவரது மகன் அமர்ஜித் (23). ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். அவரது மகள் கிருஷ்ண பிரியா (21). விமான பணிப்பெண் வேலைக்கு படித்து வந்தார். ஒரே பகுதியில் இருப்பதால் 2 பேரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. தொடர்ந்து செல்போன், சமூகவலை தளங்கள் மூலம் யாருக்கும் தெரியாமல் சில வருடங்களாக காதலை வளர்ந்து வந்தனர். இந்த நிலையில் ேநற்று முன்தினம் அமர்ஜித், கிருஷ்ண பிரியா 2 பேரும் திடீரென மாயமானார்கள்.

உடனே 2 பேரின் பெற்றோரும் வைக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு மரத்தில் 2 பேரும் தூக்குபோட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அமர்ஜித், கிருஷ்ணபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காதலர்கள் 2 பேரும் பெற்றோர்களுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கருதுகின்றனர்.

ஆனால் 2 பேரின் பெற்றோரும் காதல் விவகாரம் தங்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் திருமணம் செய்து வைத்திருப்போம் என்று கூறினர். எனவே போலீசார் காதல் ேஜாடி தற்கொலைக்கான உண்மை காரணம் என்ன? என்பது குறித்து காதலர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மரத்தில் தூக்கிட்டு காதல்ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்