SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுமணத் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

2021-09-27@ 17:40:31

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நேற்று தனது காரில் பதிந்தாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கான்வாயை திடீரென நிறுத்தினார். பின்னர் அவ்வழியாக வந்த புதுமணத் தம்பதிகளிடம் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். புதுமாப்பிள்ளையை ஆரத்தழுவி வாழ்த்திய முதல்வர், புதுமணப் பெண்ணுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். எப்போதும் திருமணம் நடந்தது? என கேட்டதற்கு சனிக்கிழமை என்று திருமண வீட்டார் முதல்வரிடம் தெரிவித்தனர்.

பின்னர், திருமண வீட்டார் சீராக கொண்டு வந்த இனிப்பையும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார். அண்மையில் காபூர்தலாவில் மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாபின் பாரம்பரிய நடனமான பாங்கரா ஆடி மகிழ்வித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்