SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடுப்பூசி இதுவரை 85 கோடியை தாண்டியது; 18 முதல் 44 வயதுடைய 53.5% பேருக்கு போட்டாச்சு..! ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்

2021-09-27@ 17:08:33

புதுடெல்லி: நாடு முழுவதும் இதுவரை 85 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி  போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இன்றைய  புள்ளிவிபரங்களின்படி இதுவரை 23,25,95,152 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி  உள்ளது. 47,41,611 பேர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். அதிகபட்சமாக  அமெரிக்காவில் 4,35,29,521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து  இந்தியா, பிரேசில், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அதிகம்  பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளது. ஐந்து மாத இடைவெளிக்குப்  பிறகு, இன்று முதல் கனடா விமானங்கள் இந்தியாவிலிருந்து நேரடியாக  இயக்கப்படுகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,000 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 280 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,47,225 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, மொத்தம் 33,678,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசியை பொருத்தமட்டில், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 18 முதல் 44 வயதுடையவர்களில் 34,66,84,035 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் போட்டுள்ளனர். அதேநேரம் 7,34,36,483 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும், 45 முதல் 59 வயதுடையவர்களில், 28.3 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அவர்களில் 15,59,65,608 பேர் ஒரு டோஸ் மற்றும் 7,35,71,780 பேர் இரு டோஸ் போட்டுள்ளனர். மூத்த குடிமக்களில் அதாவது 60 வயதுக்கு மேல் உள்ளவர்களில், 9,94,61,207 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியையும், 5,46,03,690 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 85,60,81,527 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், நேற்று மட்டும் 68,42,786 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்