SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூகுளுக்கு 23வது பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியீடு

2021-09-27@ 16:45:36

புதுடெல்லி: பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள், தனது 23வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக தனது கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து வரும் நிறுவனம் கூகுள், தேடுபொறியில் தொடங்கி, ஆன்லைன் விளம்பரம், சாப்ட்வேர், ஹார்டுவேர் என்று இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகிறது. கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998ம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம், இன்று உலகளவில் வளர்ந்துள்ளது.

கூகுள் நிறுவன‌ம் பல்வேறு தொழில்களில் கால்பதித்து இருந்தாலும், இதன் மொத்த வர்த்தகமும் ஆல்ஃபாபெட் என்ற நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிலையில், இன்று கூகுளின் 23வது பிறந்த நாளையொட்டி சிறப்பிக்கும் விதமாக கூகுளின் உருவாக்கம், கூகுள் செய்யும் வே‌லைகள், செயல்பாடுகளை கார்ட்டூன் மூலம் விளக்கும் விதத்தில் சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்