ராஜஸ்தானில் ஆசிரியர்களுக்காக நடத்திய தேர்வில் பிட் அடிக்க செருப்புக்குள் புளூடூத்: 3 பேரை பிடித்தது போலீஸ்
2021-09-27@ 00:55:42

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நேற்று ராஜஸ்தான் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு (ரீட்) நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,200 மையங்களில் நடந்த இத்தேர்வில் மையங்களில், 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில், முறைகேடுகள், வினாத்தாள் கசிவு, காப்பி அடிப்பது போன்ற மோசடிகள் நடப்பதை தடுக்க, மாநிலம் முழுவதும் போலீஸ் துணையுடன் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. தேர்வுக்கு வந்தவர்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டனர். முழுக்கை சட்டை அணிந்து வந்தவர்களுக்கு, பாதி கை சட்டையாக வெட்டப்பட்டது.
மேலும், இணையதளத்தை பயன்படுத்தி காப்பி அடிப்பதையும், வினாத்தாள், விடைகள் பரிமாற்றம் செய்யப்படுவதையும் தடுக்கவும், மாநிலம் முழுவதும் ஜெய்ப்பூரை தவிர மற்ற இடங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இணையதள வசதி துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக, தேர்வு மையங்களுக்கு வெளியிலும் போட்டியாளர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர். அப்போது, பிகானிர் மாவட்டத்தில் உள்ள காங்காசாகர் பகுதியில் தேர்வு எழுத வந்த 3 போட்டியாளர்களின் நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால், போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், செருப்பில் புளுடூத் பொருத்தி இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:
In Rajasthan teacher exam Bluetooth 3 people police in sandals to hit the bit ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வில் பிட் அடிக்க செருப்புக்குள் புளூடூத் 3 பேரை போலீஸ்மேலும் செய்திகள்
மகாராஷ்டிராவில் 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.390 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்..!!
2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா... 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
எல்லையில் பதற்றம்; காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!