SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்னாளபட்டி மாணவர் விடுதி அருகே குவிந்து கிடக்கும் குப்பை: நோய் பரவும் அபாயம்

2021-09-26@ 11:48:18

சின்னாளபட்டி: சின்னாளபட்டி  தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி அருகே மலைக்கிராம மாணவர்கள் தங்கி படிக்கும்  பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி உள்ளது. தற்போது 10, 11, 12ம்  வகுப்பு படிக்கும் மாணவர்கள் இங்கு தங்கி படித்து வருகின்றனர். மாணவர்கள்  விடுதி அருகே சுமார் 100 அடி தூரத்திற்கு பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள  பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்துள்ளன. மேலும் அப்பகுதியை சிலர்  திறந்தவெளி கழிப்பிடமாக இப்பகுதியை பயன்படுத்துகின்றனர்.

இதனால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடும்  துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியே நடந்து செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு  செல்லும் அவலம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சுகாதார சீர்கேடு  ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி  மக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • robo-teacher-2

    இனி டீச்சர்னா பயம் கிடையாது: பாலஸ்தீனத்தில் ஆசிரியராக களமிறக்கப்பட்டுள்ள ரோபோட்...நட்பு பாராட்டும் மாணவர்கள்..!!

  • dog-police-2

    சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!

  • MKStalin_Inspectetd_Thoothukudi

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • IncomeTax_Raid_SaravanaStores

    சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

  • Landslide_Tirupati

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்