திண்டுக்கல்- நத்தம் ரோட்டில் ‘தெரியாத’ டிவைடரால் தொடர் விபத்து
2021-09-26@ 11:47:33

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் திண்டுக்கலிருந்து சிறுமலை பிரிவு வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதில் ரோட்டின் நடுவே சிமெண்டால் டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் 2 பக்கமும் வாகனங்கள் செல்லலாம். ஆனால் இது தாழ்வாக உள்ளதால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகளுக்கு, வாகன விளக்குகளால் ரோட்டின் நடுவே உள்ள டிவைடர் தெரியவில்லை.
இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. விபத்துகளை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் தற்போது டிவைடரால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் குள்ளனம்பட்டி, பொன்னகரம் பகுதிகளில் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே டிவைடர் பகுதியில் இரவில் வாகன வெளிச்சத்திலும் தெரியும் வண்ணம் சிகப்பு ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி வாகனஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த வகையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதே இலக்கு: தொழில்முனைவோர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!