SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகிழக்கு பருவ மழையையொட்டி மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்: நெடுஞ்சாலைத்துறை மும்முரம்

2021-09-26@ 05:17:15

திருவள்ளூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வீடுகளுக்குள் வெள்ள நீர் செல்வதை தடுக்கவும், சுகாதார சீர்கேடு, தொற்று நோய்கள் பரவும் அபாயத்தை தடுக்கும் வகையிலும், மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்வாய்கள், சிறு பாலங்கள் தூர்வாரி தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், திருவள்ளூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் கோட்ட பொறியாளர் ஞானவேலு தலைமையில், திருவள்ளூர் உதவி கோட்ட பொறியாளர் தஸ்நேவிஸ் பெர்னாண்டோ, உதவி பொறியாளர் ராஜகமல் முன்னிலையில் மழைநீர் வடிகால்வாய் சிறு பாலங்கள் மற்றும் முக்கிய பாலங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், மழைநீர் வடிகால்வாய் மற்றும் தடுப்பு சுவர் ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியில் சாலை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலங்கள்,  சாலையோர கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்கள்  தூய்மை பணிகள் 20ம் தேதி முதல் 25ம்  தேதி வரை நடைபெற்றது. இந்த தூய்மை பணிகள் குறித்து  பள்ளிப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் திருஞானசம்பந்தம் கூறுகையில்,  `பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள  பாலங்கள், சிறுபாலங்கள், மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதேப்போல், பாலங்கள், கால்வாய்கள், தடுப்பு சுவர் பகுதிகளில் வளர்ந்துள்ள செடி கொடிகள் சுத்தப்படுத்தப்பட்டு மழைநீர் செல்ல ஏற்ப்பட்டிருந்த அடைப்புகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்