SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி

2021-09-26@ 03:48:21

அபுதாபி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், 33 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பிரித்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். தவான் 8 ரன், பிரித்வி 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, டெல்லி 21 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்நிலையில், ஷ்ரேயாஸ் அய்யர் - கேப்டன் ரிஷப் பன்ட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 62 ரன் சேர்த்தது. பன்ட் 24 ரன், ஷ்ரேயாஸ் 43 ரன் (32 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெளியேறினர். அடுத்து வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் 16 பந்தில் 5 பவுண்டரியுடன் 28 ரன் விளாசி முஸ்டாபிசுர் வேகத்தில் சகாரியாவிடம் பிடிபட்டார். அக்சர் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. லலித் யாதவ் 14 ரன், ஆர்.அஷ்வின் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராயல்ஸ் பந்துவீச்சில் முஸ்டாபிசுர், சேத்தன் சகாரியா தலா 2 விக்கெட், கார்த்திக் தியாகி, ராகுல் திவாதியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் லிவிங்ஸ்டோன் 1 ரன், ஜெய்ஸ்வால் 5 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே மில்லர் 7 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார். ராஜஸ்தான் 17 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து பரிதவித்தது.

ஒரு முனையில் கேப்டன் சஞ்சு சாம்சன் உறுதியுடன் போராட... லோம்ரர் 19 ரன், ரியான் பராக் 2, திவாதியா 9 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். சாம்சன் அரை சதம் அடித்தாலும், சக வீரர்கள் ஒத்துழைக்காததால் வெற்றி எட்டாக் கனியானது. ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன் மட்டுமே எடுத்து 33 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சாம்சன் 70 ரன் (53 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஷம்சி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி பந்துவீச்சில் அன்ரிச் நார்ட்ஜ் 4 ஓவரில்18 ரன்னுக்கு 2 விக்கெட் கைப்பற்றினார். ஆவேஷ் கான், அஷ்வின், ரபாடா, அக்சர் தலா 1 விக்கெட் எடுத்தனர். டெல்லி அணி 10 போட்டியில் 8வது வெற்றியை பதிவு செய்து 16 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. சென்னை (14), பெங்களூரு (10) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்