SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிராவோவை சகோதரன் என்றே அழைக்கிறேன்: கேப்டன் தோனி நெகிழ்ச்சி

2021-09-25@ 14:20:49

சார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நேற்று நடந்த 35வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோஹ்லி 53 (41 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), தேவ்தத் படிக்கல் 70 ரன் (50 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தனர். முதல் விக்கெட்டிற்கு இவர்கள் 13.2 ஓவரில் 111 ரன் சேர்த்த நிலையில் பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 12, மேக்ஸ்வெல் 11 என சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். சென்னை பந்துவீச்சில் பிராவோ 3, ஷர்துல் தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 38 (26 பந்து), டூபிளிசிஸ் 31 (26 பந்து), மொயின் அலி 23 (18பந்து), அம்பதி ராயுடு 32 (22 பந்து) ரன் எடுத்தனர்.

18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் எடுத்த சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெய்னா 17, டோனி 11 ரன்னில் களத்தில் இருந்தனர். 4 ஓவரில் 24 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்த பிராவோ ஆட்டநாயகன் விருது பெற்றார். 9வது போட்டியில் 7வது வெற்றியை பெற்ற சென்னை 14 புள்ளிகளுடன் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. பெங்களூரு 9வது போட்டியில் 4வது தோல்வியை சந்தித்தது. வெற்றிக்கு பின் டோனி கூறியதாவது: பனி வர வாய்ப்புள்ள போதெல்லாம் 2வதாக பேட் செய்ய விரும்புகிறோம். அவர்கள் நல்ல தொடக்கம் பெற்றனர். 9வது ஓவருக்கு பின் பிட்ச் கொஞ்சம் மெதுவாக மாறியது. இதனால் மொயின் அலிக்கு பதில் பிராவோவை பயன்படுத்தினேன். அவர் கடினமான நேரங்களில் சிறப்பாக பந்துவீசுவார். இந்த பிட்ச்சை பார்க்கும்போது, ​​இடது-வலது காம்போ முக்கியமானது என உணர்ந்தேன். எங்களிடம் முதலில் இருந்து கடைசி வரை நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

அதனால் தான் இடது-வலது பேட்ஸ்மேன் களத்தில் இருக்குமாறு ஆர்டரை மாற்றிக்கொள்கிறோம். பிராவோ பொருத்தமாக மாறிவிட்டார். நன்றாக செயல்படுகிறார். நான் அவரை என் சகோதரன் என்று அழைக்கிறேன். நான் அவரை ஒரு ஓவரில் ஆறு வெவ்வேறு பந்துகளை வீசச் சொன்னேன். அவரால் முடிந்த போதெல்லாம் அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார், என்றார். ஆட்டநாயகன் பிராவோ கூறுகையில், ஐபிஎல் உலகின் கடினமான போட்டி. இதன் மீதான எனது பெருமையும் அன்பும் என்னைத் தொடர்கிறது. விராட் மிக முக்கியமான விக்கெட். ஆயத்தம்தான் எனக்கு முக்கியம். நான் வலைகளில் பயிற்சி செய்கிறேன், என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கிறேன் மற்றும் இந்த சூழ்நிலைகளில் வர என் அனுபவத்தைப் பயன்படுத்துகிறேன். யார்க்கர்கள், மெதுவான பந்துகள் என் அடிப்படைகளில் ஒட்டிக்கொண்டது, என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • robo-teacher-2

  இனி டீச்சர்னா பயம் கிடையாது: பாலஸ்தீனத்தில் ஆசிரியராக களமிறக்கப்பட்டுள்ள ரோபோட்...நட்பு பாராட்டும் மாணவர்கள்..!!

 • dog-police-2

  சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!

 • MKStalin_Inspectetd_Thoothukudi

  தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 • IncomeTax_Raid_SaravanaStores

  சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

 • Landslide_Tirupati

  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்