SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

2021-09-25@ 01:20:17

திருத்தணி: மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.     இதில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்று குத்துவிளக்கு துவக்கிவைத்தார். பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.  முன்னதாக மாவட்ட திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். மருத்துவர் செந்தமிழ் முரசு, சுகாதார மேற்பார்வையாளர் சம்பத், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், வட்டார கல்வி அலுவலர் பாபு, வெங்கடேஸ்வரலு, முன்னாள் கவுன்சிலர் அப்துல்லா, ரஹீம், மஸ்தான், சுரேஷ், கரிமுல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திருத்தணி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திவ்யஸ்ரீ நன்றி கூறினார்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் ராசாத்தி, அங்கன்வாடி பணியாளர் ஆஜிரா ஆகியோர்  வரவேற்றனர். திமுக பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள்  தமிழ்செல்வம், அப்துல் பரீத் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல் கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து வளையல், வரிசை தட்டு, மஞ்சள், குங்குமம் போன்ற சீர்வரிசைகளை வழங்கினார். பின்னர், கர்ப்பிணிகள் அனைவருக்கும் 5 வகையான சாப்பாடு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி செயலாளர் ரஹீம், நெடுஞ்செழியன், கோல்டு மணி, நரேஷ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கீழ்முதலம்பேடு, மாதர்பாக்கத்தில் 400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கேவிஜி.உமாமகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றியக்குழு தலைவர் கேஎம்எஸ்.சிவகுமார், ஒன்றியக்குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் நமசிவாயம், மாதர்பாக்கம் ஊராட்சி தலைவர் சீனிவாசன், மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ், சாணாபுத்தூர் அம்பிகா பிர்லா, ஒன்றிய கவுன்சிலர்கள் சிட்டிபாபு, சிவா, ஆரோக்கியமேரி, நேமலூர் மனோகரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், டாக்டர் வைஷ்ணவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் சத்தான உணவுப்பொருட்களின் கண்காட்சியும் நடந்தது. கர்ப்பிணிகளுக்கு இனிப்புடன் கூடிய 5 வகையான உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஞானமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், லில்லி குமார், மேற்பார்வையாளர்கள் வசந்தா, அமுதா, குமுதா, காமாட்சி, ஜமுனா உள்பட அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர். பொன்னேரி: பொன்னேரியில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில்  300 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்