SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு

2021-09-25@ 01:20:07

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடியில் பணி புரியும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள 5053 தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் அருகே கீழம்பி திருமலை பாலிடெக்னிக் கல்லூரி, வாலாஜாபாத் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி,  குன்றத்தூர் ஆல்வின் இன்டர்நேஷனல் பள்ளி ஆகிய மையங்களில் நடக்கிறது.

இதையொட்டி, காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பியில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஆர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சியை முழுமையாக பயன்படுத்தி, தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்