ஆஸ்ட்ரவா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் தெரசா போராடி தோற்றார்
2021-09-25@ 01:19:01

ஆஸ்ட்ரவா: செக் குடியரசில் நடக்கும் ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உள்ளூர் வீராங்கனை தெரசா மார்டின்கோவா போராடி தோற்றார். நடப்பு சீசனில் விளையாடிய தொடர்களில் 5வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி இருந்த மார்டின்கோவா (26 வயது, 61வது ரேங்க்), கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் (26 வயது, 12வது ரேங்க்) நேற்று மோதினார். விறுவிறுப்பாக அமைந்த முதல் செட்டை 7-5 என கைப்பற்றிய சாக்கரி, அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி 6-3 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
அரையிறுதியில் சானியா ஜோடி: இதே தொடரின் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா - ஷுவாய் சாங் (சீனா) ஜோடி நேற்று அன்னா டானிலினா (கஜகிஸ்தான்) - லிட்ஸியா மரோஸவா (பெலாரஸ்) இணையுடன் மோதியது. இதில் சானியா ஜோடி 6-3, 3-6, 10-6 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது.
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 150 ரன்கள் குவிப்பு: மொயீன் அலி அதிரடி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன்: சிஎஸ்கே கேப்டன் தோனி
குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு கோஹ்லி உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார்: கேப்டன் டூபிளெசிஸ் பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுடன் இன்று மோதல் ஆறுதல் வெற்றிபெறுமா சென்னை?
ஆர்சிபி அணிக்கு எதிராக ஹர்திக் அரை சதம் விளாசல்
ஆர்ச்சர் மீண்டும் காயம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்