சமந்தாவுடன் விவாகரத்தா?...நாக சைதன்யா பதில்
2021-09-25@ 01:18:44

சென்னை: சமந்தாவை விவாகரத்து செய்ய இருப்பதாக வந்த தகவல் குறித்து அவரது கணவரும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யா பதிலளித்தார். இதுகுறித்து நாக சைதன்யா கூறியது: திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை நான் சிறு வயதிலிருந்தே கடைபிடித்து வருகிறேன். இந்த பழக்கம் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள்.
அந்த நல்ல பழக்கத்தை நானும் கடைபிடித்து வருகிறேன். இந்நிலையில் சமந்தாவுடன் விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு தகவல் பரபரப்பாக இருந்தால், நாளை இன்னொரு தகவல் பரபரப்பாக இருக்கிறது, முந்தையநாள் விஷயங்கள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) முதல் ஆய்வுக் கூட்டம்
30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது: அதிமுக வரவேற்பு
சீன நாட்டை சேர்ந்தவர்கள் முறைகேடாக விசா பெற உதவிய குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை கைது செய்தது சிபிஐ..!!
இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான்: பேரறிவாளன் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வாழ்த்து..!!
குற்றவாளிகள் கொலைகாரர்கள்... நிரபராதிகள் அல்ல...’ : பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து!!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்க்கும் : வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!